சென்னை முகநூல்
தமிழ்நாடு

சென்னை | இரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை!

நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

PT WEB

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையால், தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

பாதுகாப்பு காரணத்திற்காக மழைநீர் தேங்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையில் சராசரியாக 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகளவாக சோழிங்கநல்லூர் 10 சென்டி மீட்டர் அளவும், அடையாறு, வேளச்சேரி, எழும்பூரில் 9 சென்டிமீட்டர் வரை மழை பதிவானது.

மழை

சென்னை மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில் கனமழை பெய்த போதும், வடசென்னையில் மழையின் அளவு குறைவாகவே பதிவானது. தாம்பரம், செங்கல்பட்டு, குன்றத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.