தமிழ்நாடு

குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை

குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை

rajakannan

குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் அந்த அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் தடை நீடிக்கிறது.

இதனிடையே குற்றாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் செங்கோட்டையை அடுத்த இலஞ்சியில் குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. குளத்தில் இருந்த 3 மடைகளில், நடுவே இருந்த மடை உடைந்து பெருக்கெடுத்து ஓடிய நீரினால் அருகே இருந்த 15 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இலஞ்சி குளம் உடைந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.