தமிழ்நாடு

மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு... எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்

webteam

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. நவம்பர் 25ல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.