தமிழ்நாடு

பாழடைந்த தீயணைப்பு நிலைய கட்டடம் மழையால் இடிந்தது

webteam

நாகை மாவட்டத்தில் மூடப்பட்ட தீயணைப்பு நிலைய கட்டடம் நேற்றிரவு பெய்த மழையில் முழுமையாக இடிந்து விழுந்தது.

இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது குறித்து கடந்த 21ம் தேதி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இதையடுத்து இந்த கட்டடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கட்டடத்தை உடனடியாக மூடும்படி உத்தரவிட்டார். இதனால் அந்தக் கட்டடம் சீல் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் போது இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இந்தக் கட்டடம் முன்பே மூடப்பட்டு விட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.