தமிழ்நாடு

நெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல தடை!

நெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல தடை!

webteam

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பிக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், நம்பி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க முடியாமல் திணறினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் அங்கு செல்ல மாவட்ட தலைமை வன பாதுகாவலர் தடை உத்தரவு பிறப்பித்தார். பாதுகாப்புக் கருதி இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.