தமிழ்நாடு

10 மாவட்டங்களில்‌ மிகக் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

jagadeesh

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.