தமிழ்நாடு

சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை!

சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை!

webteam

சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், திருமங்கலம், பெரம்பூர், அண்ணாநகர்,அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

(கோப்புப் படம் )

புறநகர்ப் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனிடையே, 12 மாவட்டங்களில் மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்காலில் 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது, “இன்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.