தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
புதுச்சேரியை பொருத்தவரை ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 45 முதல் 55கிலோ மீட்டர் அளவில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மீனவர்கள் செல்ல வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.