மழை pt web
தமிழ்நாடு

இன்றும்... நாளையும்... சென்னையை மிரட்டப்போகும் மழை? வானிலை ஆய்வு மையம் சொன்னதென்ன?

இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பற்றி விரிவாக பார்க்கலாம்...

ஜெனிட்டா ரோஸ்லின்

இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், பிரதீப் ஜானும் இது தொடர்பான பதிவினை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி விரிவாக பார்க்கலாம்...

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாளை சென்னையில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில், இன்றே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமன்றி விழுப்புரம், கடலூர், மைலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை என 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர தமிழகத்திலும், உள்தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாத சூழலில், இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது வலுவடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.