கனமழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.