தமிழ்நாடு

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

jagadeesh

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், பல்லாவரம், பம்மல், மைலாப்பூர், உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர். சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.