தமிழ்நாடு

“காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

“காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

நூறுசதவிம் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை வரும் 2025ம் ஆண்டிற்குள் மாற்றுவதற்காக, உலக சுகாதார நிறுவனத்துடன் அறிவுறுத்தலோடு பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து 'காசநோய் இல்லாத தமிழ்நாடு -2025' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கருத்தரங்தை தொடங்கிவைத்து, காசநோய் இல்லாத தமிழ்நாடு-2025 என்ற லோகோவை வெளியிட்டார். மேலும், கடந்த ஆண்டு காசநோய் கண்டுபிடிப்பில் சிறப்பாக செயல்பட்டதாக மதுரை, திண்டுக்கல், ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதையடுத்து, சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உலக சுகாதார நிறுவனம் 2030க்குள் காசநோயை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் 2025க்குள் காசநோயை கட்டுப்படுத்த வேண்டும் எனவும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் அறிவறுத்தியுள்ளார். இதன்பேரில், மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் காசநோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ரூ.6 கோடி மதிப்பில் கையகட்ட கணினிகள், ரூ.2 கோடி மதிப்பிலான டாட் செயலி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மருந்துகங்களில் காசநோய் மருந்துகள் வாங்கினால், அதை வாங்கும் நபர்களை கண்காணிக்கவும் கணினிகளை இணைப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் காசநோய்க்கு சிகிச்சை பெறும் நபர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு பண்முக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.