தமிழ்நாடு

கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது

கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது

rajakannan

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தனை அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த நோய் குறித்து பலரும் தவறான கருத்துகளையும், வதந்திகளையும் பரப்பிய வண்ணம் இருக்கின்றனர். கொரோனாவை காட்டிலும் அது தொடர்பான வதந்திகள் இந்தியாவில் அதிக அளவில் தீ போல் பரவி வந்தன.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஹீலர் பாஸ்கர் என்பவர் வதந்திகளை பரப்பி வருவதாக சர்ச்சை எழுந்தது. கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பி வருவதாக கூறப்படும் ஹீலர்பாஸ்கர் என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட சுகாதாரத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க இலவச பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.