தமிழ்நாடு

தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட்?: அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

webteam

தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கியது தொடர்பான புகாரில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.

இதற்கிடையே கொரோனா பாதிப்பை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவியை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வாங்கின. ஆனால் ரேபிட் டெஸ்ட் தவறான முடிவுகளை தருவதாக பல மாநிலங்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் 'ரேபிட் டெஸ்ட் கிட்' களை கொள்முதல் செய்ய தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது பதிலளித்த தமிழக அரசு, குறைபாடுகளுடைய ரேபிட் டெஸ்டிங் கிட்-களை திரும்ப அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதனை அடுத்து தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கியது தொடர்பான புகாரில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது