தமிழ்நாடு

நடைபாதையில் வசிப்போருக்கு தடுப்பூசியை உறுதி செய்க - தமிழக அரசுக்கு நிதிமன்றம் உத்தரவு

நடைபாதையில் வசிப்போருக்கு தடுப்பூசியை உறுதி செய்க - தமிழக அரசுக்கு நிதிமன்றம் உத்தரவு

Sinekadhara

வீடில்லாமல் நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடில்லாத மக்கள் சிகிச்சை பெறக்கூட முடியாத நிலையில் உள்ளதாக முருகானந்தம் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வீடில்லாமல் நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் தெருவிலங்குகளுக்கு உணவளிக்க கோரிய வழக்கில் அவைக்கு உணவு முறையாகக் கிடைக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை ஐஐடி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களின் நிலை பற்றி ஆய்வு செய்யவும், அவைகளுக்கு உணவளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் தெரு விலங்குகளுக்காக ஒதுக்கீடு செய்த தொகையை விரைவில் விடுவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதற்கு, ஆளுநர் நிதியுதவியுடன் 823 மாடுகள், 102 குதிரைகல், 17,979 தெருநாய்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.