தமிழ்நாடு

ஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது

ஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது

webteam

சென்னையில் போலி நிறுவனங்களை நடத்தி ஹவாலா மோசடி செய்த புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹவாலா மோசடி தொடர்பாக மதுரை மண்டல ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை மண்டல ஜி.எஸ்.டி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடி 20ம்தேதி சோதனை நடத்தினர். இதில் போலி ஆவணங்களும், போலி நிறுவன கடிதங்களும் சிக்கின. அதன் மதிப்பு ரூ.220 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் 30 போலி நிறுவனங்கள் நடத்தி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் 45 போலி வங்கிக் கணக்குகளும் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டது. இது தொடர்பாக நீராஜ் ஓஜா மற்றும் ஜியோனிகா ஆகியோரை ஜி.எஸ்.டி விசாரணைப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாணையில் சரக்கு பரிமாற்றம் இல்லாமல் போலியாக நிறுவனங்களை உருவாக்கி, அதில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இந்தப் பணத்தை ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று 100-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.