தமிழ்நாடு

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடார் ஆஜர்

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடார் ஆஜர்

நிவேதா ஜெகராஜா

நடிகை விஜயலட்சுமிக்கு தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கைதான ஹரி நாடாரை திருவான்மியூர் காவல்துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நடிகை விஜயலட்சுமி, கடந்த 2020ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமானுக்கு ஆதரவாக ‘பனங்காட்டு படை கட்சி’யின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் விஜயலட்சுமியை மிரட்டும் விதமாக வீடியோ வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, விஜயலட்சுமி தூக்குமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதற்கிடையே கடன் வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஹரி நாடாரை பெங்களூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்திருந்தனர். இப்போது மீண்டுமொருமுறை விஜயலட்சுமி வழக்கில் ஹரி நாடாரை திருவான்மியூர் போலீசார் பெங்களூருவிற்கு சென்று கைது செய்தனர்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை சென்னைக்கு இன்று அழைத்து வந்தனர். சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது அவரை ஆஜர்படுத்தி உள்ளனர்.