தமிழ்நாடு

பிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

webteam

நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூவரை சேர்ந்த பிரதீபா, நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்த நிலையில் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் மீண்டும் பிரதீபாவின் தந்தை உள்ளிட்டோர் காவல்துறை பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். இதனை தொடர்ந்து பிரேதபரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.