சென்னையில் இருந்து 450 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வர். அதற்காக நடப்பு ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 468 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 221 பெண்கள் உள்பட 450 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.