தமிழ்நாடு

விவசாயிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கும் ஜி.வி.பிரகாஷ்

விவசாயிகளுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கும் ஜி.வி.பிரகாஷ்

webteam

விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்க இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் பல இடங்களில் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த ஜி.வி.பிரகாஷ், அதற்காக கொம்புவச்ச சிங்கம்டா என்ற தலைப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜூடன் இணைந்து பாடல் ஒன்றினையும் வெளியிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்துள்ள நிலையில், தற்போது விவசாயிகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், அதற்காக தனது அடுத்த படத்தின் ஊதியத்தினை முழுமையாக வழங்க இருக்கிறார். தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கான அரசின் வழிமுறைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இதற்கான முறையான அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.