பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்வற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முன்விடுதலை செய்யப்படுவோர் குறித்து ஆய்வு செய்வதற்கு பல்வேறு குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத, ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
வழிக்காட்டுதல்களுக்கு உட்பட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவினர், தமிழ்நாடு அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.