ஜிஎஸ்டி வரி வசூல் 8.9 சதவீதம் உயர்வு pt desk
தமிழ்நாடு

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 8.9 சதவீதம் உயர்வு

மத்திய நிதி அமைச்சகம் இன்று அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 8.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்

தமிழ்நாட்டில் சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் 10,761 கோடி ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வரி வசூல், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 11,188 கோடி ரூபாயாக உயர்ந்து, 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல் 8.9 சதவீதம் உயர்வு

புதுச்சேரியில் சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் 212 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 252 கோடி ரூபாயாக ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்து 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல் சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் 1,72,003 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியிருந்தது. இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி வசூல் 8.9 சதவீதம் உயர்ந்து 1,87,346 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.