தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டுவிட்டதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான அளவில் இருக்கும் தாலுகாக்களை இருண்ட மண்டலங்களாக பிரித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன்படி, நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில், தமிழகத்தில் உள்ள 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வற்றிவிட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், 212 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் ஆயிரத்து 139 இடங்களை கண்காணித்து, கடந்த 2008 முதல் 2017-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் இப்புள்ளி விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.