நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு டிசம்பர் மாத குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 15ரூபாய் 43காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியார் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். இந்திய தேயிலை வாரியம் மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதத்திற்கான பச்சை தேயிலை விலையினை நிர்ணயிக்கும், அதன்படி டிசம்பர் மாதத்திற்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய்43காசாக நிர்ணயம் செய்துள்ளது.
இது டிசம்பர் மாதம் தேயிலை ஏல விற்பனையின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு மாத இறுதிநாளில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையினை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிறதா என தேயிலை வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தேயிலை வாரிய முதன்மை அதிகாரி எம்.பாலாஜி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.