கிருஷ்ணகிரி முகநூல்
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை!

கிருஷ்ணகிரியில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பள்ளியில், போலி என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அங்கிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணையின்போது, சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 23 பேரில், இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இரண்டு வாரங்களில் வழங்க உத்தரவிட்டது.

கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சட்டப் பணிகள் குழு அறிக்கை அளித்த பின்னரும் காவல்துறை ஏன் முறையாக விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.