தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு: வழக்கு ஆகஸ்டு 9-க்கு தள்ளி வைப்பு

கிரானைட் முறைகேடு: வழக்கு ஆகஸ்டு 9-க்கு தள்ளி வைப்பு

webteam

கிரானைட் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பி.ஆர்.பி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட 47 வழக்குகளை ஜூலை 26 ம் தேதிக்கு ஒத்திவைத்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரானைட் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுப்ரமணியன் தொடர்ந்த 11 வழக்குகள், மற்றும் காவல்துறையினரால், பிஆர்பி உள்ளிட்ட 7 கிரானைட் நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட 16 வழக்குகள் என 27 வழக்குகள் மீது மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வழக்குகள் மீதான மறு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கிரானைட் நிறுவன அதிபர்கள் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த 6 வழக்குகள் மீதான விசாரணையும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.