தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

webteam

கிரானைட் முறைகேடு தொடர்பான 57 வழக்குகள் மீதான விசாரணையை ஒத்திவைத்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழவளவு, கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி பட்டா இடங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுப்ரமணியம், பி.ஆர்.பி உள்ளிட்ட தனிநபர்கள் மீது 42 வழக்குகளை தொடர்ந்திருந்தார். அதேபோல், அரசுக்கு சொந்தமான இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பிஆர்பி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் மீது காவல்துறையினர் 15 வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இதையடுத்து 57 வழக்குகளின் விசாரணையையும், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வரும் நவம்பர் 29ஆம் தேதிக்‌கு ஒத்திவைத்து உத்ரவிட்டுள்ளது.