தங்களுடைய மகன் 20 ஆண்டுகளாக பார்க்கக்கூட வராததால் ஏமாந்து போன 2 மூதாட்டிகள் கருணைக்கொலை செய்ய
கோரியுள்ளனர்.
கோவையில் 101 மற்றும் 70 வயதுகளில் பழனியம்மாள் என்ற இரண்டு மூதாட்டிகள் வாழ்ந்து வருகின்றனர். ஒருவருக்கே
வாழ்க்கைப்பட்ட இந்த மூதாட்டிகளில், மூத்த பழனியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை.
இளைய பழனியம்மாளுக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
கணவர் இறந்த நிலையில், 20 ஆண்டுகளாக தங்களை பார்க்கக்கூட வராத மகன், பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்து தங்களை கைவிட்டுவிட்டதாக மூதாட்டிகள் கூறுகிறார்கள்.
அத்துடன் தங்களுக்கு உரிமையான சொத்துகளை மீட்டுத்தருமாறு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பல மனுக்களை அளித்தும்
நடவடிக்கை இல்லை என்றும், கோட்டாட்சியரிடம் தீர்வு கிடைக்காததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், அவர் மீண்டும்
கோட்டாட்சியரை நாடுமாறு கூறுவதாக அவர்கள் வேதனைப்படுகிறார்கள். மகளின் பராமரிப்பில் வாழும் இந்த இரு மூதாட்டிகளும்,
மருந்து செலவுக்குக்கூட பேரனின் வருமானத்தை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.