காமராஜர் சாலையில் உள்ள கடற்கரை சாலையில் விஐபி மற்றும் விவிஐபிக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தலாம். பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்தா சாலை, லேடி வெலிங்டன் கல்லூரியில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
சாந்தோம் சாலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பீட்ஸ் (St. BEDES) மேல்நிலைப்பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பீட்ஸ் (St. BEDES) மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சாந்தோம் சமுதாயக் கூடம், லூப் ரோடு ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
ஆர்.கே.சாலையில் MRTS லைட் ஹவுஸ் சாலை, NKT பள்ளி, ராணி மேரி கல்லூரி, புனித எபாஸ் பள்ளியில் நிறுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம், விக்டோரியா விடுதி மைதானத்தில் நிறுத்தலாம்.
அண்ணாசாலையில் தீவுத்திடல் மைதானம், PWD மைதானம், மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, சிந்தாதிரிப்பேட்டை MRTS ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும் என்றும், தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் விரைவில் வருகை தர வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.