தமிழ்நாடு

தெரு நாய்களுக்கு தடுப்பூசி.. ரேபிஸ் நோயை தடுக்க நடவடிக்கை..!

Rasus

ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்க சென்னையில் சுமார் 57 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்திற்காக, கால்நடை மருத்துவர் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்ட உள்ளது. அந்த குழுக்கள் சென்னையின் பல்வேறு மண்டலங்களில் வீதி தோறும் சென்று இப்பணியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தெருநாய்களைப் பிடித்து, பாதுகாப்பான வகையில் அதற்கு தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டுள்ளது. 77 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், நாளொன்றுக்கு சுமார் 150 நாய்களுக்கு தடுப்பூசி போட இருப்பதாக தெரிகிறது. தடுப்பூசி போடப்பட்ட தெரு நாய்களைக் கண்டறிய, அதன் மேல் அடையாள முத்திரையிடப்படும் என்றும், நாய்கள் குறித்த விவரங்கள் அறிக்கையாக தயார் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கணக்குப்படி, அம்பத்தூர் மண்டலத்தில் 7 ஆயிரத்து 383 தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது.