தமிழ்நாடு

அரசு ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - உயர்நீதிமன்றம்

Rasus

அரசு பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 2 கிமீ தூரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதனை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அப்படி டியூசன் எடுப்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசை மிரட்டுவதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், இது இளைய தலைமுறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் புகார் பற்றி தெரிவிக்க ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் எனவும் அதற்கு 8 வார கால அவகாசமும் தமிழக அரசிற்கு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.