தமிழ்நாடு

ரத்து செய்யப்பட்டும் மாணவர்களை சென்றடையாத கல்விக் கட்டணம்

ரத்து செய்யப்பட்டும் மாணவர்களை சென்றடையாத கல்விக் கட்டணம்

webteam

அரசுப் பள்ளி ஆங்கில வழி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டும், இதுவரை கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் வசூலிக்கபட்டு வந்த 250 ரூபாய் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. அத்துடன் செலுத்திய கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கட்டணத்தை திரும்ப கேட்கும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் முறையாக பதிலளிப்பதில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி துறையிடம் விளக்கம் கேட்டபோது, விரைவில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.