தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: ஆலோசனை வழங்க மறுத்த அரசு வழக்கறிஞர்

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: ஆலோசனை வழங்க மறுத்த அரசு வழக்கறிஞர்

webteam

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்ற நம்பிக்கை ‌வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தம்மால் உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்க‌முடியாது என மத்திய அரசின் தலைமை வழக்கறி‌ஞர் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் நீதிமன்றத்தில் ஜூலை 11-ம் தேதி ஆஜராகி சட்ட ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான கே.கே.வேணுகோபால் தாம் ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு சட்ட ஆலோசனை அளித்து வருவதாக தெரிவித்தார். இதனால் தம்மால் நீதிமன்றத்தில் ஆலோசனை வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறினார்.