“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
வேலூரில் உள்ள ஸ்ரீ நாராயணி தங்க கோவில் வளாகத்தில் நடைபெற்ற 31 ஆம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ நாராயணி மூலமந்திர மகா யாகத்திலும் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
”ஆன்மிகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், சிலர் ஆன்மிகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறி வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. ஆன்மிகமும், தமிழும் ஒன்று தான்.
தமிழக முதல்வர் இந்து பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வதில்லை. நான் பாகுபாடு பார்ப்பது இல்லை என கூறும் முதல்வர், இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரையில் எனக்கு பதில் இல்லை.
ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல் ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால், திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது ஏன் ஆளுநரை தேடித் தேடி சந்தித்து புகார் கொடுத்தார்கள்.
எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். இந்தியாவில் கொரோனா இல்லாமல் போனதற்கு ஆன்மிகமும் அறிவியலும் தான் காரணம்” என்றும் கூறினார்.