Governor rn ravi pt desk
தமிழ்நாடு

நீலகிரி: தோடர் பழங்குடியின மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

உதகையில் தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடனமாடி மகிழ்ந்தார்.

webteam

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப் பயணமாக உதகைக்கு நேற்று சென்றார். இதனை தொடர்ந்து இன்று உதகை தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்த ஆளுநருக்கு தோடர் பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து வரவேற்றனர்.

Governor rn ravi

இதையடுத்து தோடர் இன மக்களின் பாரம்பரிய குல தெய்வக் கோவிலை பார்வையிட்டு, அதன் வழிபாட்டு முறைகளை கேட்டறிந்தார் ஆளுநர். பின் ஆளுநர் முன்பு தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தோடர் பழங்குடியின மக்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை பார்வையிட்ட ஆளுநர், பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.