ஆளுநர் ஆர்.என். ரவி pt web
தமிழ்நாடு

“தவறான கல்விக் கொள்கையால் வேலைக்காக கையேந்தும் நிலையில் இளைஞர்கள்” ஆளுநர் ஆர்.என்.ரவி

உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான கல்வி கொள்கையால், படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார் .

PT WEB

துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய ஆளுநர் தான் வேந்தராக பதிவி ஏற்றபோது மாநில பல்கலைக்கழங்கள் தனிமைப்படுப்பட்டு பெரும் சிக்கலில் சிக்கி தவித்து வந்ததாக தெரிவித்தார். மேலும் புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம் என்றும் நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராகி வருகிறது எனவும் கூறினார். திருவள்ளுவரின் கற்க கசடற குறளை தமிழில் கூறிய ஆளுநர் அதற்கு உண்டான விளக்கத்தையும் அளித்தார். மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் 35 துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.