திருமணத்தை பதிவு செய்வதை எளிமையாக்கும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்பு திருமணம் எங்கு நடக்கிறதோ அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்தது. இதனை மாற்றுவதற்காக சட்டத் திருத்தத்தை தமிழக அரசு பேரவையில் தாக்கல் செய்தது.
இதன்படி மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் திருமணத்தை பதிவு செய்யலாம். திருமணம் நடைபெறும் இடத்தில் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.