தமிழ்நாடு

8 ஆண்டுகளாக பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தினகரன்

8 ஆண்டுகளாக பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தினகரன்

Veeramani

தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை, பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியிருக்கிறார்.

டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் “தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம்கோரி போராடி வருகிறார்கள். கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள்.1/2</p>&mdash; TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://twitter.com/TTVDhinakaran/status/1341265763257077761?ref_src=twsrc%5Etfw">December 22, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>