தமிழ்நாடு

வகுப்புக்கு வராத மாணவனை அடித்து உதைத்ததாக கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

வகுப்புக்கு வராத மாணவனை அடித்து உதைத்ததாக கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

kaleelrahman

கடலூர் மாவட்டத்தில் மாணவரை காலால் எட்டி உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பணியிடை நீக்கம் செய்து ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பிற்கு வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிப்போட வைத்து பிரம்பால், இயற்பியல் ஆசிரியர் சுப்ரமணி என்பவர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை கால்களால் எட்டியும் உதைத்தார்.

சக மாணவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இது தொடர்பாக மாணவர் அளித்த புகாரின் பேரில் சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சுப்ரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நி;லையில், ஆதிதிராவிடர் நலத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.