தமிழ்நாடு

ஆறுகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு

ஆறுகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு

கலிலுல்லா

தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முக்கிய ஆறுகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தேவையான தர அளவுகளை அடைவதையும், நீர் நிலைகள் மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிகழ்நேர அடிப்படையில் இணையதளம் மூலமாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி, நொய்யல், பவானி உள்ளிட்ட 14 இடங்களில் ஏற்கனவே நிறுவபப்பட்ட நீர் தர கண்காணிப்பு மையங்களை புதுப்பித்து நிறுவ தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. மேலும் இரண்டு நடமாடும் நீர் தர கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தவும் தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.