தமிழ்நாடு

வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீடு - தமிழகஅரசு அரசாணை வெளியீடு

EllusamyKarthik

வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்தாண்டு முதல் கல்வி சேர்க்கைகளிலும் சிறப்பு ஒதுக்கீடு என அரசாணை மூலம் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம், சீர்மரபினருக்கு 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 (2021) முதல் சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில் இந்த சிறப்பு ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. குறிப்பாக எதிர்வரும் கல்வியாண்டுக்கான (2021 - 22) சேர்க்கையில் இந்த சிறப்பு ஒதுக்கீடு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.