மக்கள் நலப்பணியாளர்கள் திருப்பி வழங்கிய 5 கோடியே 10 லட்சம் ரூபாய் ஊதியத் தொகையை மீண்டும் அவர்களுக்கே வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், இவ்விவகாரம் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, அவர்கள் 5 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து 163 ரூபாயை அரசுக்கு திருப்பிச் செலுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி? ஊரக வளர்ச்சித்துறை பரிசீலனையை தமிழக அரசு ஆய்வு
தங்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இம்முடிவை மேற்கொண்டதாகவும் அரசு கூறியுள்ளது. அவர்கள் திருப்பித் தந்த அந்தத் தொகையினை மீண்டும் அவர்களுக்கே வழங்குவதென தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக, தற்போதைய பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.