தமிழ்நாடு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 31 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா !

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 31 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா !

jagadeesh

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 மருத்துவ பணியாளர்களும் ராஜீவ் காந்தி மருத்துவமனை பணியாளர்கள்தான். ஆனால் அவர்கள் இம்மருத்துவமனையில் மட்டுமே பணியாற்றவில்லை. நந்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு மையங்களில் பணியாற்றி வந்தவர்கள்.

இதில் 3 பேர் மருத்துவர்கள் ஆவார்கள். முதல்நிலை, இரண்டாம் நிலை செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என 31 நபர்களுக்கு கடந்த 2 நாட்களில் தொற்று உறுதியாகியுள்ளது”என்றார்.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் நேற்று 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.