தமிழ்நாடு

’எடை குறைவுடன் பிறந்த குழந்தை’ - 55 நாட்களாக சிகிச்சை அளிக்கும் மதுரை அரசு டாக்டர்கள்!

’எடை குறைவுடன் பிறந்த குழந்தை’ - 55 நாட்களாக சிகிச்சை அளிக்கும் மதுரை அரசு டாக்டர்கள்!

Sinekadhara

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஏழே மாதத்தில் எடை குறைவுடன் பிறந்து ஆபத்தான நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு 55 நாட்களாக பராமரித்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உசிலம்பட்டியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு ஏழே மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. 950 கிராம் எடையுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தையை மருத்துவர்கள் ராதாமணி, தமிழ்மொழி, செந்தில்குமார் ஆகியோர்,  55 நாட்கள்  தீவிர சிகிச்சை அளித்து ஆயிரத்து 800 கிராம் அளவு எடையை அதிகரிக்க வைத்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.