தமிழ்நாடு

பிளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால் எலும்பும் தோலுமாக பரிதாப நிலையில் தென்காசி சிறுமி

பிளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால் எலும்பும் தோலுமாக பரிதாப நிலையில் தென்காசி சிறுமி

JustinDurai

'புதிய தலைமுறை' செய்தி எதிரொலியாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து உயர் மருத்துவ சிகிச்சையும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு மருத்துவர் ராஜேஸ்கண்ணன் உறுதி அளித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூரை சேர்ந்த சீதாராஜ் - பிரேமா தம்பதியரின் மகள் இசக்கியம்மாள் என்ற 5 வயது குழந்தை, கடந்த 4 மாதஙகளுக்கு முன்னர் பிளிச்சிங் பவுடர் போன்று ஏதோ ஒரு பொருளை சாப்பிட்டுள்ளார். அதன் விளைவாக அந்த குழந்தை மிகவும் உடல் மெலிந்து பாதிப்புக்குள்ளான நிலையில் இருப்பது குறித்து 'புதிய தலைமுறை'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ் கண்ணன் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரச்செய்து பரிசோதித்து சிகிச்சையை தொடங்கினார்.

குழந்தையின் உடல்நிலை குறித்து அவர் கூறுகையில்,''குழந்தையின் உணவுக்குழாயில் ஏற்பட்ட பாதிப்பால் உணவு உண்ண இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உடனடியாக சிகிச்சை வழஙகப்பட்டு வருகிறது. மேலும் உயர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தர தயாராக உள்ளோம்'' எனக் கூறினார்.