தமிழ்நாடு

ஆங்கில வழி கல்விக்கான கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியீடு

ஆங்கில வழி கல்விக்கான கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியீடு

webteam

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளிடப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என சட்டபேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.