நாட்டிலேயே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆபத்தான நிலையில், ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
சுமார் 73 சதவிகித அளவுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதன் காரணமாக விபத்துகள் நிகழ்வது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மொத்தம் 11,790 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 849 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்டிராவின் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், புனே போக்குவரத்துக் கழகங்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மாநகர போக்குவரத்து பேருந்துகளால் அதிகளவில் விபத்துகள் நிகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு மாநகர பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பல பேருந்துகள் அதையும் தாண்டி இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.