தமிழ்நாடு

அரசுப் பேருந்துகள் தமிழகத்திலேயே அதிகம்

அரசுப் பேருந்துகள் தமிழகத்திலேயே அதிகம்

webteam

போக்குவரத்து துறை தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான முக்கிய சேவையை வழங்கி வரும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தி வருவாய் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தான் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. சிறிய கிராமம், மலைப்பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 23 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழக போக்குவரத்து துறையில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 2600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் துறை 24 மணி நேரம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. இதில் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு ஆண்டுக்கு ஒரு முறை நிதி ஒதுக்குவது அவசியம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளன. 

நாள் ஒன்றிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் அரசுப் பேருந்தில் பயணிப்பதாகவும், இதனை அதிகரிக்கும் வகையில் போக்குவரத்து கழகத்தை வருவாய் அதிகம் ஈட்டுவதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.