தமிழ்நாடு

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு கவுரவம் சேர்த்த கூகுள் நிறுவனம்

Rasus

தமிழகத்தில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.

கல்வியாளர், அரசியல்வாதி, மருத்துவ நிபுணர், சீர்திருத்தவாதி என பன்முக திறமை கொண்டவர் முத்துலட்சுமி ரெட்டி. இவர்ஆங்கிலேயர் காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் நடத்தி வைப்பதை எதிர்த்து பெண் உரிமைக்காக போராடியவர். அவரது 133-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி கூகுள் நிறுவனம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் டூடுளை வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது.

முன்னதாக முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினமான ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.