தமிழ்நாடு

புனித வெள்ளி: ராமேஸ்வரம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை

புனித வெள்ளி: ராமேஸ்வரம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை

kaleelrahman

புனித வெள்ளியையொட்டி ராமேஸ்வரம் அருகே சிலுவைப் பாதை நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏரளாமான மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர்.

ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா பகுதியில் ஆண்டுதோறும் புனித வெள்ளியையொட்டி சிலுவைப் பாதை நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் புனித வெள்ளி தினமான இன்று, சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து இயேசுபிரான் மற்றும் யூதர்கள் போன்று வேடமணிந்தவர்கள் சிலுவையை சுமந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து யூதர்கள் இயேசுவை, சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்று நடித்து இயேசுவின் பிறப்பு, இறப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக சிலுவைப் பாதை நிகழ்வு நடைபெற்றது.

மேலும் சிலுவைப் பாதை சென்று கொண்டிருந்தபோது இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மதங்களை கடந்து வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர். பின்னர் ஓலைகுடாவில் உள்ள தேவாலயத்தில் சிலுவைப் பாதை சென்றடைந்த பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.